Frankfurt Tamil Sangam e.V – Pongal & AGM on 19.01.25 (Sunday)
அன்பார்ந்த பிராங்பேர்ட் தமிழ்ச் சங்க உறுப்பினர்களே,
எதிர்வரும் 19.01.2025 – ஆம் தேதி அன்று தமிழர் திருநாளான – தைப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம்.
இடம் : Saalbau Sossenheim, Siegener Str. 22, 65936 Frankfurt am Main.
நாள் : 19.Jan.2025 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: காலை 09:00 மணி முதல் மாலை 18:00 மணி வரை ( AGM நேரம் : 14.00 to 16.00 மணி )
உங்கள் அனைவரையும் இவ்விழாவிற்கு அழைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
The last date to register is 12.01.2025, Sunday
Google Form Registration & Pre Payment is Mandatory
முக்கிய குறிப்புகள்:
- பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாழை இலை விருந்தை ஏற்பாடு செய்ய இருப்பதாலும், அதிக உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்கும், முன்பதிவு அவசியம்.
- கூகிள் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, FTS PayPal / Bank கணக்கில் முன்கூட்டியே பணம் செலுத்துவதன் மூலம் உங்கள் பங்கேற்பு மற்றும் முன்பதிவை உறுதிசெய்யலாம். இந்த முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
FTS பொங்கல் விழா நிகழ்ச்சி நிரல்
- 09.00 to 10.30 பொங்கல் வைத்தல் / பொங்கல் படையல்
- 10:30 to 10:35 வரவேற்புரை
- 10:35 to 11:30 நாட்டிய நடனம்
- 11:30 to 12:00 பொங்கல் விருந்து ஏற்பாடு
- 12:00 to 14:00 வாழை இலை விருந்து
- 14:30 to 16:00 ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் (AGM) (Only for Members)
- 16:30 to 18:00 வேடிக்கை விளையாட்டுகள், உறியடி மற்றும் ஆட்டம் பாட்டம். (Fun Games, Uriyadi – On spot registration )
இந்நிகழ்ச்சியை குறித்த சந்தேகங்கள் அல்லது கேள்விகளுக்கு, info@frankfurttamilsangam.com , தொடர்புகொள்ளவும்.
உங்களின் பேராதரவுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள். தங்களை மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.
என்றும் தங்கள் ஆதரவை நாடும்,
பிராங்பேர்ட் தமிழ்ச் சங்கம்
Frankfurt Tamil Sangam e.V
Data Protection Your Personal data shall be used by Frankfurt Tamil Sangam for communication, planning & Coordination of Frankfurt Tamil Sangam activities. As per the EU data protection law & German Bundesdatenschutzgesetz (BDSG), the personal data shall not be shared to any third party without your consent. Please contact us at info@frankfurttamilsangam.com if you disagree the usage of your personal data for Frankfurt Tamil Sangam activities.